......ஓம் நமசிவாய......
வழிப்பாட்டு நேரம்
காலை 10.00 - 12.00
மாலை 05.00 - 08.00

வடதிருவானைக்கா பெயர் வரக்காரணம்

தென்னாட்டிலுள்ள அப்புத்தலமாகிய திருச்சி திருவானைக்கா கோயில் கொண்டு உள்ளவரும் இத்திருத்தலத்தில் உள்ளவரும் சம்புகேசுவரர் என ஒரே திருநாமத்தை உடையவராதலாலும், இத்திருத்தலம் ஏரிக்கரையில் அமைந்துள்ளதாலும், இவ்விரு திருத்தலங்களில் மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாக அமைந்துள்ளதாலும் இத்திருத்தலத்திற்கு வடதிருவானைக்கா எனப்பெயர் வழங்குகிறது.
செம்பாக்கம் பெயர் வரக்காரணம்
முருகப்பெருமான் சூரனை சம்மாரம் செய்தபோது சிரம் விழுந்த இடம் சிரம்பாக்கமாகும். சிரம்பாக்கம் என்பது மருவி செம்பாக்கம் என வழங்கலாயிற்று எனக் கூறப்படுகிறது. மேலும் ஆண்டுதோறும் சூரசம்மார விழா நடத்தப்படுவதோடு, திருப்போரூர் முருகப்பெருமான் திருக்கோயில் கொடியேற்றுவிழா ஆண்டுதோறும் இவ்வூர் மக்களால் நடத்தப்பட்டு வருகிறது. வீர சைவ மரபினரும், செங்குந்தர் மரபினரும் அதிகமாக வாழும் இவ்வூர் குன்றின் மேல் செவ்வேலால் அருள்புரியும் முருகப்பெருமான், சூரனை சம்மாரம் செய்ய திருப்போரூர் செல்லும் வழியில் நவவீரர்களுக்குக் கட்டளையிட்டதாக வரலாறு கூறுவதாலும் இவ்வூர்மக்கள் சைவ நெறியில் தழைத்து ஆன்மீக பற்று உடையவர்களாக விளங்குகிறார்கள்.