......ஓம் நமசிவாய......

செம்பாக்கம் அருள்மிகு சம்புகேசுவரர் திருக்கோயில் திருத்தல மகிமை

தென்னாடுடைய சிவனே போற்றி என்பார் மாணிக்கவாசகர். இப்படிப்பட்ட தென்னாட்டில், தொண்டைவள நாட்டில். காஞ்சிபுரம் மாவட்டத்தில். திருக்கழுக்குன்றம், திருப்போரூர், திருவிடைச்சுரம், அரனமர்ந்தபுரம் முதலான சிவத்தலங்களின் சூழலில் அமைந்துள்ளது செம்பாக்கம் அருள்மிகு சம்புகேசுவரர் திருக்கோயில்.
மேலும்

தலபுராண வரலாறு

அமைவிடம்
திருத்தல மகிமை
நாவல் மரத்தைத் தல விருட்சமாகக் கொண்டு விளங்கும் பழைய திருத்தலம். ஐந்து லிங்கக் காட்சியும், ஐந்து சபை நடராசர் காட்சியும், ஆறுபடைவீட்டு திருமுருகன் காட்சியும், அகத்தியர் முதலான ஏழு முனிவர்கள் கண்டுகளித்த திருத்தலம்.
இத்திருத்தலம் காஞ்சிபுரம் மாவட்டம், செங்கற்பட்டு வட்டம்,திருப்போரூர்-செங்கற்பட்டு வழித்தடத்தில், திருப்போரூரிலிருந்து 7-வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது.
நாவல் மரத்தை இயற்கையாக அக்கினி மூலையில் தலவிருட்சமாகக் கொண்ட திருத்தலமாதலால் இத்திருத்தலத்தின் மகிமையைக் கண்டவர், கேட்டவர், சிறப்புரைத்தவர் இருபத்தொரு தலைமுறைக்கு இன்பம் பெற்று இனிது வாழ்வார்கள்.