......ஓம் நமசிவாய......
வழிப்பாட்டு நேரம்
காலை 10.00 - 12.00
மாலை 05.00 - 08.00

திருக்கோயில் நித்திய பூசைகள்/விழாக்கள் :

செம்பாக்கம் என வழங்கும் வடதிருவானைக்கா அருள்மிகு அழகாம்பிகை சமேத சம்புகேசுவரர் திருக்கோயிலில் நடைபெறும், நித்திய பூசைகள், திருவிழாக்கள் முதலான தகவல்கள் அன்பர்கள் திருக்கோயிலுக்கு வந்து வழிபட ஏதுவாக கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.
செம்பாக்கம் அருள்மிகு சம்புகேசுவரர் திருக்கோயிலுக்குப் போதிய வருமானம் இல்லை. இருந்தாலும் மற்றத் திருக்கோயில்களில் நடைபெறுவதைப் போல, சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை, பூசைகள், திருவிழாக்கள் முதலானவற்றை செம்பாக்கம் கிராமத்தில் உள்ள சில குடும்பத்தைச் சேர்ந்த அன்பர்கள் வழி வழியாகச் செய்து வருகின்றனர். இதுவே இத்திருக்கோயிலுக்கு உள்ள தனிச்சிறப்பாகும்.
திருக்கோயில் திறந்து இருக்கும் நேரம் காலை 10 மணி முதல் 12 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
(விழாக்காலங்களைத் தவிர)
திருக்கோயில் நிர்வாகச் சார்பில் நடைபெறும் நித்திய பூசைகள்
1. உச்சிக்கால பூசை (பகல் பூசை)
2. அந்திக்கால பூசை (மாலை பூசை)

நித்திய பூசையுடன இறைபணிமன்ற அந்திக்கால/ சோமவார அறக்கட்டளையும், சேவா சங்க அறக்கட்டளையும் சேர்த்து செய்யப்படுகிறது
மாத கிருத்திகை, சஷ்டி, பௌர்ணமி, பிரதோசம் சிவராத்திரி மேற்குறிப்பிட்ட நித்திய பூசையுடன் அன்பர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பூசைகள் சேர்த்து செய்யப்படுகிறது.

பெரிய விழா
உலக நன்மைக்காக அருள்மிகு சம்புகேசுவரர் இறைபணி மன்றம் மூலம் நடத்தப்படும் கார்த்திகை மாதம் முதல் சோமவாரப் பெருவிழா
தனிப்பட்ட அன்பர்களால் செய்யப்படும் மற்ற விழாக்கள்
சித்திரை மாதம்
தமிழ் புத்தாண்டு லட்சார்ச்சனை விழா சித்திரா பௌர்ணமி விழா, நடராசர் திருவோண அபிசேகம்.
வைகாசி மாதம்
வைகாசி விசாகம் விழா.
ஆனி மாதம் நடராசர் ஆனித்திருமஞ்சன அபிசேகம்.
ஆடி மாதம்
முதல் வெள்ளிக்கிழமை 108 பால்குடங்களுடன் அபிசேகம் மற்றும் விழா.
ஆவணி மாதம்
விநாயகர் சதுர்த்தி விழா, நடராசர் சுக்கல சதுர்த்திதி அபிசேகம்.
புரட்டாசி மாதம்
நவராத்திரி 9 நாட்கள் விழா மற்றும் உற்சவம், மற்றும் நடராசர் சுக்ல சதுர்த்திதி அபிசேகம்.
ஐப்பசி மாதம்
கந்தர் சஷ்டி விழா, திருக்கல்யாணம் மற்றும் சூர சம்மார விழா.
கார்த்திகை மாதம்
சோமவாரப் பெருவிழா, பரணி தீபம் மற்றும் கார்த்திகை தீப விழா.
மார்கழி மாதம்
மாதம் முழுவதும் மார்கழி மாத பூசை, நடராசர் ஆருத்திரா அபிசேகம்/உற்சவம்.
தை மாதம்
பொங்கல் திருவிழா உற்சவம், தைப்பூசம் - 108 பால் குட விழா.
மாசி மாதம்
மகா சிவராத்திரி உற்சவம்/ 6 கால பூசை மற்றும் நடராசர் சுக்ல சதுர்த்தி அபிசேகம்.
பங்குனி மாதம் பங்குனி உத்திர விழா - திருக்கல்யாணம்.